Pages

Wednesday, April 11, 2012

நிஜங்கள் நிழல்கள்

கலங்காமல் கரை தாண்டி வர
நான் கடல் நீர் அல்ல
கரை தொடும் ஆசை இருந்தும்
அலையின்றி அடக்கப்பட்ட அணைநீர்

தேங்கி கிடக்கும் என்னை நெருங்கி
கல்லெறிந்து பார்க்காதே எனக்கு
ஏங்கி கிடக்கத்தான் தெரியும் எனினும்
ஓங்கி எழத் தெரியாது - போதும்

சுகமாய் கால் நனைத்துப் போக இது
உப்பு கடல் நீர் அல்ல - நண்பனே
தப்பு கானல் நீர் ஏமாந்து போகாதே
என்னை விட்டு எழுந்து போ .......

Sudum Nila

இரவு  நேர  நட்சத்திர  கும்பலில்  
    நிலவு  என்றும்  தனி  தான்  இதை
அறியாத  நிலவு  நிதம்  தேய்வதும் 
    வளர்வதும்  ஒரு  கதை  தான்