ஆர்ப்பரிக்கும் எண்ண அலைகள்
எனக்குள் மோதும் போதும்
ஆனந்த அருவி வெள்ளமாய்
எனக்குள் வழியும் போதும்
எனக்குள் மோதும் போதும்
ஆனந்த அருவி வெள்ளமாய்
எனக்குள் வழியும் போதும்
தனிமை நதி தவிப்பாய்
என்னை தழுவும் போதும்
என்னை பகிர்ந்து கொள்ள
என் கனவுகளில் சிறகடித்து
உடன் பறக்க, என் லட்சிய
நிஜங்களின் தோள் சேர்த்து
திசை தேட யாரும் இல்லை
ஜன சமுத்திரத்தில் தனியொரு
தீவாய் நான் நிற்கும் போது
நெஞ்சு குழிக்குள் நெருப்பாய்
ஒரு நெருடல் ...........................


