
என் மனதுக்குள் ஒரு நொடி
பவனி வந்து பார் தெரியும்
வண்ணம் கலைந்த ஓவியங்களுக்கும்
வாசம் இழந்த மலர்களுக்கும்
துயரம் கடந்த பயணங்களுக்கும்
தூக்கம் தொலைத்த இரவுகளுக்கும்
அப்பால் புத்தகத்தின் நடுவில்
பத்திரபடுத்திய மயிலிறகைப் போல
உன் நினைவுகள் வந்து மெதுவாய்
உயிர் கிளறி விட்டு போவது புரியும் ...........