Pages

Thursday, March 1, 2012

உள்ளம் கவர் கள்வன்

யார் அந்த கள்வன் என்
உள்ளம் கவர் கள்வன்

தினம் தினம் வருகிறான்
        தோள் மீது சாய்த்து என்
துயர் தீர்க்க பார்க்கிறான்


உச்சியிலே இதழ் பதித்து
           உறவாக எனை சேர்த்து
உயிர் சக்தி ஊட்டினான் அவன் ....


இதம் தரும் பார்வையிலும்
              இதழோர நகைப்பிலும் என்
என் சோகம் நீக்கி சொர்க்கம் தந்தான்


அவன் மார்பில் முகம் பதித்து
             என் மனம் உருகி விழி நீர் கசிய
விருட்டென்று எழுந்தேன் - ஐயோ


யார் அந்த கள்வன் - காணத்
        தவிக்கிறேன் என் முகமறியா
                                                        நாயகனை


வாழ்க்கை கானலானாலும் கனவுகளை
             கவிதையாக்கிய - எங்கே அவன் என்
                             என் உள்ளம் கவர் கள்வன் ..

No comments:

Post a Comment